BREAKING NEWS

குடியாத்தம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி இந்திய குடியரசு கட்சியினர் கோரிக்கை

குடியாத்தம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி இந்திய குடியரசு கட்சியினர் கோரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி இந்திய குடியரசு கட்சி வேலூர் மண்டல செயலாளர் இராசி தலித் குமார் ரயில்வே உதவிகோட்ட பொறியாளர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளன. பீடி, தீப்பெட்டி, நெசவு, தேங்காய் உற்பத்தி, பால்கோவா தயாரிப்பு, தங்கம் என்று பலதரப்பட்ட சிறுதொழில்கள் நடைபெற்று பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள், வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்டு வரும் குடியாத்தம் ரயில் நிலையத்தை மேம்படுத்தினால், ரயில்வே துறைக்கு கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்பது மாற்றுக்கருத்து இல்லை.

இந்த ரயில் நிலையத்தில் உள்ள மூன்று நடைமேடைகளிலும் பயணிகள் மேற்கூரை சரிவர இல்லை.

இதனால், பயணிகள் மழையிலும், வெயிலிலும் நின்று ரயில்கள் ஏறும் நிலை உள்ளது.

ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான கழிவறை, குளியலறை வசதி அறவே இல்லை.

குடிநீர் வசதியும் இல்லை. உணவகமும் இல்லை. ரயில்வே கேண்டீனை ஏற்படுத்த வேண்டும்.

சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பதி செல்லும் ரயில்களை கூடுதலாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லால்பாக், பிருந்தாவன், இன்டர்சிட்டி போன்ற ரயில்களை உடனடியாக நிறுத்தினால், நூற்றுக்கணக்கான பயணிகள் பயணிப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
பயணிகள் நடைமேடை தரையை இரு அடிகளாவது உயர்த்த வேண்டும். வெகு தாழ்வாக இருக்கிறது.

ஏற்கனவே இருந்த பயணச்சீட்டு வாங்கும் கவுன்ட்டரும் நுழைவுவாயிலும் மூடப்பட்டு, புதிய கவுன்ட்டர் செயல்படுகிறது. பழைய நுழைவுவாயில் மூடப்பட்டு, புதிய கவுன்ட்டர் செயல்படுவதால், பயணிகள் 2,3-ஆம் நடைமேடைகளுக்குச் செல்ல நடைமேம்பாலம் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதனால், பயணிகள் ஆபத்தான முறையில் லெவல் கிராசிங்கில் கடக்கும் நிலை உள்ளது. எனவே, புதியதாக நடைமேம்பாலத்தை அமைக்க வேண்டும்.
குடியாத்தம் ரயில் நிலையத்தில் இருந்து சீசன் எடுப்போர் பெரம்பூர் ரயில் நிலையம் வரை மட்டுமே எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் பயணிகள் சிறப்பு அனுமதி, குடியாத்தம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு நேரடியாக சீசன் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதவிர, குடியாத்தம் நகரம், பஸ் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் ரயில் நிலையம் உள்ளது. பேருந்தில் வருவோர் ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்தி கீழே இறங்கி, 100 மீட்டர் நடக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, குடியாத்தம் ரயில் நிலையத்துக்கும், பேருந்து நிலையத்துக்கும் மினி பஸ் வசதியை ஏற்படுத்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள் திட்டத்தின்படி, குடியாத்தம் ரயில் நிலையத்தில் சிறப்பு அனுமதி பெற்று குடியாத்தம் ஸ்பெஷல்களான கைத்தறி லுங்கி, பால்கோவா, தேங்காய், தேங்காய் நார் பண்டல் போன்றவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

CATEGORIES
TAGS