BREAKING NEWS

குப்பையில் கிடந்த பெண் சிசு – அரியமங்கலம் போலீசார் விசாரணை

குப்பையில் கிடந்த பெண் சிசு – அரியமங்கலம் போலீசார் விசாரணை.

திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து சாலையில் உள்ள குப்பைமேட்டில் அடையாளம் தெரியாத பெண் சிசுவை மீட்டு அரியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கல்லாங்குத்து செல்லும் சாலையில் உள்ள குப்பைமேட்டில் பெண் சிசு சடலமொன்று கிடப்பதாக அப்பகுதியினர் அரியமங்கலம் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அரியமங்கலம் போலீசார் பிறந்து சில மணி நேரங்களே ஆன தொப்புள் கொடியுடன் கூடிய இறந்த நிலையில் கிடந்த பெண் சிசுவின் சடலத்தை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் குப்பையில் கிடந்த பெண் சிசு யாருடையது ? இங்கு எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )