கும்பகோணம் அருகே திருநீலக்குடி காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் மகனும் மிரட்டிய வழக்கில் தந்தையும் கைது.

கும்பகோணம் அருகே திருநீலக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இளந்துறை கிராமத்தில் வசிக்கும் ஆதி (17) அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி குளிப்பதை செல்போனில் படம் பிடித்து அப்பகுதியில் உள்ள நபர்களுக்கு அனுப்பி உள்ளார் .
இது குறித்து சிறுமியின் தந்தை ,ஆதியின் தந்தை பாலகிருஷ்ணனிடம் (45) கூறி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.தனது மகன் அப்படித்தான் செய்வான் என பாலகிருஷ்ணன் கூறவே சிறுமியின் தந்தை திருநீலக்குடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
காவல்துறையினர் ஆதி மற்றும் அவரது தந்தை பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து ஆதி யை போக்சோ சட்டத்திலும், அவரது தந்தை பாலகிருஷ்ணனை மிரட்டல் தொடுத்த வழக்கிலும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
