கும்பகோணம் ஜி.எஸ்.கே.தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் கல்விகட்டணம் செலுத்தாத மாணவர்களை முதல்வர்அறையின் முன்பு நாள் முழுவதும் நிறுத்தி துன்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் கதறல்.

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் சோழன் மாளிகையில் அமைந்துள்ளது டாக்டர் கல்யாணம் சுந்தரம் நினைவு சிபிஎஸ்இ தனியார் பள்ளி, இதில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பல்வேறு கிராமங்களில் இருந்து சென்று கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போது புதியதாக பொறுப்பு ஏற்ற பள்ளி முதல்வர் ஜெயந்தி பள்ளி கல்விக்கட்டணம் மற்றும் வாகன கட்டணம் செலுத்தாத மாணவ மாணவிகளை அவரது முதல்வர் அறையில் முன்பு நாள் முழுவதும் நிறுத்தி வைத்து துன்புறுத்துகின்றனர் இதனால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலைக்கு தூண்டும் வகையில் பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகமும் ஈடுபட்டு வருவதாக பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.
பணமதிப்பிழப்பு கொரானா போன்ற பேரிடர்களில் பெற்றோர்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கும் கிராம மக்கள் மீது இந்த கல்வி ஆண்டு முதல் அதிக பள்ளி கல்வி கட்டணத்தையும், வாகன கட்டணத்தையும் ஏற்றி பெற்றோர்கள் மீது அதிக சுமையை ஏற்றி வருகின்றனர்.
கொரானா போன்ற பேரிடர்களில் கல்வி ஆண்டுகளில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர்களுக்கு தற்போது பள்ளி வாகனத்தில் ஏற மாணவ மாணவிகளை தடைவிதித்து நடுரோட்டில் விட்டு செல்கின்றனர் பள்ளி வாகன ஓட்டுனர்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக நிலுவை இல்லாமல் கட்டணம் செலுத்தும் பெற்றோர்கள்
கொரோனா காலங்களில் பெற்றோர்கள் சிக்கி வாழ்வாதாரம் நசுக்கப்பட்டு துயர் துடைக்கும் நேரங்களில் தனியார் பள்ளிகள் மாணவ மாணவிகள் மீது கல்வி பறிக்கும் உரிமையை பள்ளி முதல்வரும், நிர்வாகமும் சேர்ந்து ஈடுபடுகின்றனர் என பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தனியார் பள்ளிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மீது ஏற்படும் மன அழுத்தத்திற்கு மருந்தாக தமிழக அரசு செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது:-
இந்த தனியார் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் டாப்பர் கிளாஸ் என்று கூறி பெற்றோர்களிடம் ரூ 50,000 வரை மேலும் கூடுதலாக கல்விக்கட்டண கொல்லையில் ஈடுபடுவதால் மாணவ மாணவிகள் மனநிலையில் தாழ்வு மனப்பான்மையை வளர்த்து விடுகின்றனர். இதனால் கல்வி பயிலும் மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை வளர்த்து விடுகின்றனர்.
பெற்றோர்களுக்கு கிடைக்காத கல்வி தங்களது பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதனால் தான் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளி மோகத்தில் விழ வைத்து விடுகின்றனர். தற்போது பள்ளியில் படிக்கும் பெற்றோர் பல குடும்பங்கள் விவசாயிகள் இருப்பதால் அறுவடை முடிந்து தான் பள்ளி கல்வி, வாகன கட்டணம், செலுத்த முடியும் என்று கூறினாலும் படிக்கும் பாட புத்தகங்களை கூட கொடுக்க பள்ளி முதல்வர் பொருட்படுத்துவதில்லை.
தனியார் பள்ளி முதல்வர் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுவதால் ஏழை நடுத்தர விவசாய குடும்பத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை புரிந்து கொள்வதில்லை எனக் கூறினர்.மேலும் இதே நிலைநீடித்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை திரட்டி பெருள்திரள் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.