கும்பகோணம், பழங்கள் விற்பனை செய்யும் பிரகாஷ் (22) என்பவர் வலையப்பேட்டையிலுள்ள திடலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

கும்பகோணம் மேலகோட்டையூரைச் சேர்ந்த தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்யும் பிரகாஷ் (22) என்பவர் நேற்றிரவு சந்தேகத்திற்கிடமான முறையில் வலையப்பேட்டையிலுள்ள திடலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
அதனடிப்படையில் கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
CATEGORIES தஞ்சாவூர்
