கும்பகோணம் மாநகராட்சி, கார்னேஷன் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம். சாக்கோட்டை அன்பழகன் எம் எல் ஏ ஆய்வு.

தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று
வருகிறது.
கும்பகோணம் மாநகராட்சி, கார்னேஷன் மருத்துவமனையில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் – மாநகர திமுக செயலாளர் சு.ப.தமிழழகன் , கும்பகோணம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் தி.கணேசன் , மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் குட்டி.இரா.தெட்சிணாமூர்த்தி , மாமன்ற உறுப்பினர் டி.ஆர்.அனந்தராமன் மற்றும் பலர் உள்ளனர்.
