BREAKING NEWS

குற்றம்

அடகு நகைகளை திரும்ப கேட்டதால் பழிவாங்க பள்ளி தோழன் மூலம் மாமியார் நகையை பறித்த மருமகள் கைது: தலைமறைவான வாலிபருக்கு போலீஸ் வலை

அடகு நகைகளை திரும்ப கேட்டதால் பழிவாங்க பள்ளி தோழன் மூலம் மாமியார் நகையை பறித்த மருமகள் கைது: தலைமறைவான வாலிபருக்கு போலீஸ் வலை

ஆவடி: அண்ணனூரில் அடகு வைத்த நகையை திரும்ப கேட்டதால், மாமியாரிடம் தங்கசங்கிலியை பறித்த மருமகளை போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த அவரது பள்ளி தோழரை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடியை அடுத்த அண்ணனூர், தேவி நகர், சிவகாமி தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (35). இவர், பாடியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லதா (எ) மோகனசுந்தரி (30). இவர், மளிகை கடை நடத்தி வருகிறார். இவர்களுடன் வினோத்குமாரின் தாயார் லலிதா (60) வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வினோத்குமார் வீட்டிலிருந்து வேலைக்கு சென்றுள்ளார். இதன்பிறகு, லதாவும், மளிகை கடைக்கு சென்று விட்டார். வீட்டில் லலிதா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வீட்டுக்குள் திடீர்ரென புகுந்து அவரது கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பித்து சென்றுவிட்டார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )