குற்றம்
கண்ணில் மிளகாய்பொடி தூவி கணவரை கொலை செய்த மனைவி..! – சினிமாவை மிஞ்சும் அதிர்ச்சி தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தந்தை கொலைக்குக் காரணமான கணவரை பழிக்குப் பழிவாங்கும் நோக்கில் கண்ணில் மிளகாய் பொடி தூவி மனைவி வெட்டிக் கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.இராணுவ வீரரை கொலை செய்த சம்பவத்தின் அதிர்ச்சி தரும் பின்னணிகள் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பாரூர் அருகே உள்ள பண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ்குமார். ராணுவ வீரரான இவர் மேற்கு வங்க மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சசிகலா.
கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராரு ஏற்பட்டதால் கணவருடன் கோபித்துக் கொண்டு சசிகலா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6 ந்தேதி தனது மனைவியை அழைத்து வர வீட்டுக்குச்சென்ற நரேஷ்குமார், மனைவியின் தந்தை மகாலிங்கத்துடன் சண்டையிட்டு அவரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கூறப்படுகின்றது .
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராணுவ வீரர் நரேஷ்குமார் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்த நிலையில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நரேஷ்குமார் ஜாமீனில் வெளியே வந்ததும் தனது மனைவி குடும்பத்தினருக்கு வெறுப்பேற்றும் விதமாக பண்ணந்தூர் கிராமத்திற்கு சென்று மீண்டும் வம்பிழுத்ததாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே அவர் மீது கடுமையான ஆத்திரத்துடன் இருந்த அவரது மனைவி சசிகலா தனது கணவனது முகத்தில் மீது மிளகாய் பொடியை தூக்கி வீசியுள்ளார்.
கண் எரிச்சலில் தடுமாறி நின்ற கணவனை சசிகலா அறிவாளால் சரமாரியாக வெட்ட, அவரது உறவினர்கள் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியும் கீழே விழச் செய்ததாக கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நரேஷ்குமாரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நரேஷ்குமார் பரிதாபமாக பலியானார்.
இதையடுத்து இந்த கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் குடும்பத்துடன் தலைமறைவானதாக கூறப்படுகின்றது.
இந்த கொலை தொடர்பாக பாரூர் காவல்துறையினர் நரேஷ்குமாரின் மனைவி சசிகலா , திருப்பூர் மாநகர ஆயுதப்படை போலீஸ்காரர் மகேஸ்வரன், மகேஷ்வரனின்மனைவி ராஜகுமாரி , முன்னாள் ராணுவ வீரர் பரமேஸ்வரன்,பரமேஸ்வரனின் மனைவி தீபா ,வடிவேல் , சதீஷ் ,ஆகிய 7 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
ராணுவ வீரரின் மனைவி தனது தந்தையின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக உறவினர்களுடன் சேர்ந்த இந்த கொலை சம்பவத்தை திட்டமிட்டு செய்துள்ளதாக போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.