குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம்.

இந்தியநுகர்வோர் சம்மேளனம் கடந்த 25 ஆண்டுகளாக நுகர்வோர் விழிப்புணர்வுக்காக பணியாற்றி வருகிறது.
25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நுகர்வோர் நலனை பாதுகாக்கவும் நுகர்வோர் விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தவும்”பாரத் யாத்ரா என்று 28 மாநிலங்களில் 90நாள்கள் 17,000 கிலோமீட்டர் வெள்ளிவிழா” பாரத்யாத்ரா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் 23 மாவட்டத்தில் 25 சிறப்பு கூட்டங்கள் நடைபெற இருங்கின்றன .
இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் ஸ்ரீபரா சக்தி மகளிர் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்றமும் இந்திய நுகர்வோர் சம்மேளனமும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் அமுதவள்ளி தலைமையிலும்
தென்காசி குடிமை பொருள்கள் வட்டச்சியர் பாபு முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்தியநுகர்வோர். சம்மேளனத்தின் தேசியத்தலைவர் ஆனந்தசர்மா, தேசிய செயல் தலைவா டாக்டர் செல்வராஜ்அகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்கள்.
கல்லூரிகுடிமக்கள் நுகர்வோர்மன்ற திட்ட அலுவலர் முனைவர் அனிதா. வரவேற்று பேசினார்
தேசிய துணைத்தலைவர் செல்வம் பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு தேசிய யாத்திரை செயலாளர் சஞ்சய் காந்தேவால், தேசிய செயற்குழு உறுப்பினர் டேனியல், மதுரை மண்டல் செயலாளர் வசந்த் ஆகியோர் நுகர்வோர் விழிப்புணர்வு உரையாற்றினார்கள்.
நிறைவாக இந்திய தேசிய நுகர்வோர் சம்மேளன தென்காசி மாவட்டதலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்திய நுகர்வோர் சம்மேள தென்காசி மாவட்ட துணை செயலாளர் திருவிலஞ்சி குமரன், கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்றமும் செய்து இருந்தனர்.
