குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் பேராசிரியர்கள் போராட்டம்!
தென்காசி மாவட்டம், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் வாயில் முன்பு
இணைப் பேராசிரியர், பேராசிரியர் பணி மேம்பாடு கோரிக்கையான எண் 5 அரசாணையை அமல்படுத்த வேண்டும், எம்ஃபில், பி.எச்.டி ஊக்க ஊதிய உயர்வினை உடனடியாக வழங்கிட வேண்டும்,
அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வினை உடனடியாக நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூட்டா கிளை சார்பில் வாயில் முழக்க போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு மூட்டா கிளை தலைவர் மதுமதி தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் பாண்டிமாதேவி, பொருளாளர் மாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் இசக்கியம்மாள் கோரிக்கைகளை விளக்கி கோஷமிட்டனர். இதில் 30 க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தென்காசி