BREAKING NEWS

குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊட்டியில் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து தரும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கோவை மற்றும் உதகை மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். இதில் முதல்கட்டமாக நேற்று உதகையில் 124வது மலர் கண்காட்சியை ஆரம்பித்து வைத்ததுடன் மேலும் பல அரசு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து இன்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடக்கி வைக்க உள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவையில், உரை நிகழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் 110-ன் விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும் வண்ணம் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும் மேலும் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

ஸ்டாலின்

அதன்படி இன்று நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள குழந்தைகள் மையத்தில், குழந்தைகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாமை தான் அறிவித்தபடி வெற்றிகரமாக தொடங்கி வைத்தார்.

அங்குள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 வயதுக்கும் குறைவான குழந்தைகளை தனித்தனியே இனம்பிரித்து கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு மருத்துவ உதவி அளித்து ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுவே இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.

மேலும் நீலகிரி மாவட்டத்தை உருவாக்கிய ஜான் சல்லீவனின் சிலை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டிருந்தது. ஜான்சல்லீவன் உதகையின் முதல் கலெக்டராக பணியாற்றியவர் மேலும் உதகையை உருவாக்கியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு.

ஸ்டாலின்

தமிழக அரசு ஜான்சல்லிவினின் சேவையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு அங்கு சிலை நிறுவியுள்ளது. ஊட்டியில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்காவின் முக்கோண சந்திப்பில் ஜான் சல்லிவனின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )