கூடங்குளம் தமிழன் ஸ்போர்ட்ஸ் கிளப் முதல் பரிசு பெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளத்தில் நடந்த கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் கூடன்குளம் அணியும், பெண்கள் பிரிவில் மதுரை
மாவட்ட அணியும் முதல் பரிசு பெற்றன. நெல்லை மாவட்டம் ஆவரைகுளத்தில் 3வது ஆண்டாக பலமாவட்டங்கள் ஒருங்கிணைந்த மின்னொளி கபடி போட்டி நடந்தது. போட்டியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி, மதுரை, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த ஆண்கள், பெண்கள் அணிகள் பங்குபெற்றன. போட்டியை மாவட்ட பஞ். கவுன்சிலர் பாஸ்கர், அமெச்சூர் கபடிகழக செயலாளர் பகவதி பெருமாள், புரோ கபடி நடுவர் சுந்தரராஜன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். போட்டியில் பங்கு பெற்ற அணிகளில் ஆண்கள் பிரிவில் கூடன்குளம் தமிழன் ஸ்போட்ஸ் கிளப் முதல் பரிசு 50ஆயிரம் ரூபாயும், கூடல் நகர் அணி 2ம் பரிசு 30 ஆயிரம் ரூபாயும், அளத்தங்கரை அணி 3ம் பரிசு 20 ஆயிரம் ரூபாயும் பெற்றன. பெண்கள் பிரிவில் மதுரை திருப்பரங்குன்றம் கட்டக்குடி அணி முதல் பரிசு 30 ஆயிரம் ரூபாயும், தென்காசி அணி 2ம் பரிசு 20 ஆயிரம் ரூபாயும், வடக்கன்குளம் எஸ்ஏவி அணி 3ம் பரிசு15ஆயிரம் ரூபாயும், கோவை அணி 4ம் பரிசு 10 ஆயிரம் ரூபாயும் பெற்றன. சிறப்பு விருந்தினராக மாவட்ட பஞ். தலைவர் வி. எஸ். ஆர்.ஜெகதீஸ் பங்கேற்றார். ஏற்பாடுகளை ஆவரைகுளம் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
