கைவினைப் பொருள்-விவசாய பொருள்-இயற்கை பொருள்-உற்பத்தி பொருள், உணவு பொருள் இந்த ஐந்து வகைக் காண- தேசிய விருது-கைவினை பொருளுக்கான பிரிவு போட்டியில் தஞ்சாவூர் கலைத்தட்டு முதலிடத்தை பெற்றுள்ளது.

அறிவு சார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் நோடல் அலுவலர் ப.. சஞ்சய் காந்தி செய்தியாளரிடம் கூறியதாவது;
இந்தியாவில் தலைசிறந்த பொருட்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஒரு மாதமாக பொது வாக்கெடுப்பு மத்திய அரசு -வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் நடத்தியது.
இந்த போட்டியில் புவிசார் குறியீடு பதிவு பெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றன.
கைவினைப் பொருள்-விவசாய பொருள்-இயற்கை பொருள்-உற்பத்தி பொருள், உணவு பொருள்
இந்த ஐந்து வகைக் காண- தேசிய விருது-கைவினை பொருளுக்கான பிரிவு போட்டியில் தஞ்சாவூர் கலைத்தட்டு முதலிடத்தை பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற விழாவில் தஞ்சாவூர் தட்டிற்கு அறிவு சார் சொத்துரிமைக்கான 2022 ஆம் ஆண்டு தேசிய விருது கிடைத்தது.
2006 புவிசார் குறியீடு பதிவு காண விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. 2007 புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்தது.
200 மேற்பட்ட கைவினைக் கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்ய வேண்டிய ஏற்பாடு செய்து அதனை வெற்றிகரமாக முடித்தவர் தான் புவிசார் குறியீடு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி ஆவார்.
இவர் 27 க்கு மேற்பட்ட பொருட்களை புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்து தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஆக்கிய பெருமையை சாரும்.
தஞ்சாவூர் கலைத்தட்டு ( அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்) தஞ்சாவூர் ஓவியம்-தஞ்சாவூர் வீணை-ஒரு பொம்மை–நாச்சியார் கோவில் குத்துவிளக்கு-நரசிங்கம்பட்டி நாதஸ்வரம் நாதஸ்வரம் ஆகிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட பொருளை தஞ்சாவூருக்கு பெற்றுக் கொடுத்து தமிழ்நாட்டிற்கும் திரு சஞ்சய் காந்தி அவர்கள் பெருமை தேடித் தந்துள்ளார்.
இந்த நிலையில் சட்டம் இயற்றி 19 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இந்திய அரசு சார்பில் முதல் முதலில் உருவாக்கப்பட்ட அறிவு சார் சொத்துரிமைக்கான தேசிய விருது பொது வாக்கெடுப்பு மூலம் தஞ்சாவூர் தட்டிற்கு கிடைத்தது தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கிடைத்த பெருமை என்று திரு சஞ்சய் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சாவூர் தட்டு என்பது எந்த ஊரிலும் செய்ய முடியாத கலைநயமிக்க ஐம்பொன்னால் உருவாக்கப்படும் கலைத்தட்டாகும். 250 ஆண்டு வரலாற்றை பூர்வீகமாகக் கொண்டது..
தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னர் காலத்தில் தனி முத்திரையை படைத்ததும் இந்த கலைத்தட்டு உலகமெங்கும் வியாபாரதியில் கொடி கட்டி பறக்கும் என்று குறிப்பிட்டார் சஞ்சய் காந்தி.