BREAKING NEWS

கொடைரோடு அருகே சாலைவசதி கேட்டு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் 100-க்கும் மேற்பட்டோர் கைது.

கொடைரோடு அருகே சாலைவசதி கேட்டு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் 100-க்கும் மேற்பட்டோர் கைது.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.

 

கொடைரோடு அருகே சாலைவசதி செய்து தராமல் காலம் தாழ்த்தும் இரயில்வே நிர்வாகம் மற்றும் பேரூராட்சியைக் கண்டித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் காலவரையற்ற சாலை மறியல் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திரனாளிகளை கைது செய்தனர்.

 

 

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ஜெகநாதபுரம் இரயில்வே கேட் முதல் ஏட்டுநாயக்கர் காலனி,இரயில்வே குடியிருப்பு வழியாக தெற்கு இரயில்வேக்கு சொந்தமான இடத்திலுள்ள மாவுத்தன்பட்டி,பொம்மனம்பட்டி உள்ளிட்ட 10-க்கு மேற்பட கிராமங்களுக்கு செல்லும் சுமார் ஒரு கிலோமீட்டர் மண்சாலை,

 

 

கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக பழுதடைந்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்லமுடியாத நிலையில் சேரும் சகதியுமாக உள்ளதாகவும்,

 

எனவே இந்த சாலையை சரி செய்ய கோரி கடந்த ஓராண்டாக போராடி வருவதாகவும் இதுகுறித்து பலமுறை பேச்சுவார்தை நடத்தியும் பலனில்லாததால் நேற்று அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மற்றும் இரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து.

 

கொடைரோடு தபால் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க ஒன்றிய செயலாளர் சசிக்குமார் தலைமையில், மாவட்ட செயலாளர் பகத்சிங், மாவட்டத் தலைவர் ஜெயந்தி முன்னிலையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் காலவரையற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

இப்போராட்டத்தில் மாவுத்தம்பட்டி உட்ப்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திரனாளிகளின் நீண்டநாள் கோரிக்கையான கொடைரோடு, மாவுத்தன்பட்டி சாலையை உடனடியாக சரி செய்ய கோரி கோசங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர்.

 

மறியலில் ஈடுபட்டவர்களுடன் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கொடி, நிலக்கோட்டை டிஎஸ்பி.முருகன் இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் மேலும் மறியலை கைவிடாததால் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )