கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூரில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 400 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்…
கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூர் குருவரெட்டிபட்டியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
தகவலின் பேரில் அந்தியூர் குருவரெட்டிபட்டி பகுதிக்கு சென்ற மதுவிலக்கு டி.எஸ்.பி.சண்முகத்தின் தலைமையிலான குழுவினர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது அக்னி மாரியம்மன் கோவில் அருகே உள்ள மயானம் அருகில் இருவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.
தொடர்ந்து விற்பனைக்காக வைத்திருந்த 65 ஆயிரம் மதிப்புள்ள 400 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த மதுவிலக்கு காவல் துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்
விசாரணையில் மதுவிற்பணையில் ஈடுபட்டு வந்தது குருவரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த பிரகாஷ் 46, என்பதும் அதே பகுதியை சேர்ந்த செல்லவேல் (62) என்பதும் தெரியவந்தது.
மேலும் அப்பகுதியில் 15 நாட்கள் நடக்கும் அக்னி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருவதும், கோவிலுக்கு வருபவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்தது..
பின்னர் மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்த இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்…