BREAKING NEWS

கோவில்பட்டியில் சலவைத் தொழிலாளர் சங்கத்துக்கு புதிய தொட்டி திறப்பு விழா

கோவில்பட்டியில் பாரதிநகர் பகுதியில் சலவைத் தொழிலாளர் சங்கத்துக்கு புதிய தொட்டி திறப்பு விழா.

கோவில்பட்டியில் பாரதிநகர் பகுதியில் சலவைத் தொழிலாளர் சங்கத்துக்கு புதிய தொட்டி திறப்பு விழா முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதி நகர் பசுவந்தனை சாலையில் உள்ள சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து 4.50 லட்சம் மதிப்பில் சலவைத் தொழிலாளர் சங்கத்துக்கு சலவை துறையில் புதிய கட்டப்பட்டுள்ள தொட்டி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது‌ இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சலவைத் துறையில் புதிதாக தொட்டி கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன்,அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி,நகர செயலாளர் விஜயபாண்டியன்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன்,மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் காளிபாண்டி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்‌.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )