கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட 3 லட்ச ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பை கப்பு பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் முத்துக்குமார் என்பவர் அப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் பைகள் வைத்து இருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் உதவியுடன் வீட்டை சோதனையிட்ட பொழுது வீட்டில் 20க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் பிளாஸ்டிக் கப்புகள் பைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை மேலும் இதன் மதிப்பு 3 லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

