கோவில்பட்டியில் வ.உ.சி .அரசு பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி தொடக்கம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சென்னையில் நடைபெறும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு வட்டார அளவிலான சதுரங்க போட்டி கோவில்பட்டி வ.உ.சி .அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கியது போட்டியை நகர் மன்ற 22-வது வார்டு உறுப்பினர் லூர்துமேரி தொடக்கி வைத்தார்.
சதுரங்க போட்டியில் கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள 12 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்
6-முதல் 12 வகுப்பு என 3 பிரிவுகளாக மாணவ- மாணவிகளுக்கு தனித் தனியாக போட்டி நடத்தப்படுகிறது.
3 பிரிவு மாணவ மாணவியர் களுக்கு பிரிவு மாணவிகளுக்கு தனி தனி அறையில் போட்டி நடைபெறும். ஒவ்வொரு அறையிலும் 15 டேபிள்கள் போடப்பட்டுள்ளது. போட்டிகள் முடிவடைந்த பிறகு மாலை 3 மணிக்கு மேல் பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது.