BREAKING NEWS

கோவில்பட்டி அருகே அருள்மிகு ஶ்ரீ நாகதேவதை அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி  அருகே அருள்மிகு ஶ்ரீ நாகதேவதை அம்மன் திருக்கோயிலில்  மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் ஸ்ரீ ரேசமுல கோத்திரம் மானாடு பெல்லமு கொண்டவார் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ நாகதேவதை அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இன்று திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ,கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முருகன், உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )