BREAKING NEWS

கோவில்பட்டி அருகே கையில் காய்ந்த பருத்தி செடியுடன் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டி அருகே கையில் காய்ந்த பருத்தி செடியுடன் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஒன்றியம் வெள்ளாளங்கோட்டை கிராமத்தில் 100 ஏக்கரில் பருத்தி விவசாயம் செய்துவருகின்றனர். இதில் ஒரு குறிப்பிட்ட பருத்திவிதை விதைத்த 15 விவசாயிகள் பருத்தி செடி முளைத்து பூ, காய் வரும் தருணத்தில் செடி வேரோடு காய்ந்துவிட்டது. இதுகுறித்து வேளாண் அதிகாரிடம் தெரிவித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .

அதனால் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தென்மண்டல அமைப்பு செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சாலைமறியல் பேராட்டம் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து தாசில்தார் சுப்புலட்சுமி தலைமையில் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதன கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. மதுரை மெயின்ரோட்டில் தமிழக விவசாயிகள் சங்க தென்மண்டல அமைப்பு செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், ஒன்றிய செயலாளர் கல்யாணப் பாண்டி மற்றும் வெள்ளாளங்கோட்டை இருளப்பன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை வலியுறுத்தி.அதன்பின்னர் காய்ந்த பருத்தி செடிகளை கையில் ஏந்தியபடி சாலைமறியல் போராட்டம் நடத்தி, வேளாண் அதிகாரி, விற்பனை செய்த உரக்கடை,விதை வித்துக்கள் தரக்கட்டுப்பாடு முறையாக பின்பற்றாதை கண்டித்து கண்டன கோஷமிட்டனர்.

கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்து மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )