BREAKING NEWS

கோவில்பட்டி அருகே தனியார் ஆம்னி பேருந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயம்.

கோவில்பட்டி அருகே தனியார் ஆம்னி பேருந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயம்.

திருவனந்தபுரத்திலிருந்து இருந்து சென்னைக்கு 40 மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அரசங்குளம் அருகே வந்த போது தேசிய நெடுஞ்சாலை யிலிருந்த சிறிய பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எட்டு பேர் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டனர்,நெல்லையில் தனியார் மருத்துவமனையில் நான்கு நபர்களுக்கு முதலுதவி சிகிச்சை பெற்று சென்றனர் மற்றும்
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக எட்டு பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நாகர்கோவிலைச் சேர்ந்த சிவராமன், ஆம்னி பேருந்து ஓட்டுநர் பாண்டி மற்றும் பெயர் தெரியாத ஒருவரும் என மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )