கோவில்பட்டி அருகே பலத்த சூறை காற்றில் 1000-க்கும் மேற்பட்ட பப்பாளி மரம் சாய்ந்து விழுந்து சேதம் – அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா காப்புலிங்கபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (53). விவசாயி. இவர் காப்புலிங்கம்பட்டியலிருந்து குமாரகிரி செல்லும் ரோட்டில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 1200-க்கும் மேற்பட்ட பப்பாளி மரங்களை பயிரிட்டுள்ளார். பூ பூத்து, காய் காய்த்து பருவம் அடைந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று திடீரென பலத்த காற்று வீசியது. இந்த காற்றின் வேகத்தில் 1000-க்கும் மேற்பட்ட பப்பாளி மரங்கள் முறிந்து கீழே விழுந்தது.இதில் பப்பாளி மரங்களில் காய்த்து தொங்கிய பப்பாளிகள் சுமார் 50 டன்னுக்கு மேல் கீழே விழுந்து சேதம் ஏற்பட்டது. இது குறித்து விவசாயி செல்வம் தெரிவித்ததாவது பல கஷ்டங்களுக்கு மத்தியில் விவசாயம் செய்து வருகிறோம்.கோடை காலம் என்பதால் 1000 – க்கும் மேற்பட்ட பப்பாளி பயிட்டுள்ளேன். கடன் வாங்கி விவசாயம் செய்து வந்த நிலையில் பலத்த காற்று வீசியதில் பப்பாளி முறிந்து கீழே விழுந்தது. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
.
வருவாய்துறையினர் பார்வையிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதே பகுதியில் சண்முக ராஜ் என்பவரது தோட்டத்திலும் 100 – க்கும் மேற்பட்ட பப்பாளி மரம் சாய்ந்துள்ளது.