கோவில்பட்டி அருகே விவசாயிகள் செல்ல முடியாதவாறு வேலி அமைத்த சோலார் நிறுவனம். வேலியை அகற்ற கோரி கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலத்தில் மனு அளித்த விவசாயிகள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட போடுபட்டி கிராமம் சர்வே எண் 52 /1 மற்றும் 4ல் அரசு புறம்போக்கு இடத்தையும் தொட்டம்பட்டி முதல் முள்ளுபட்டி வர அரசு வண்டிப்பாதை செல்கிறது.

இதில் தொட்டம்பட்டி பகுதியில் தனியார் நிறுவனம் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைத்து விளைநிலங்களுக்கு செல்லக்கூடிய பாதையை அடைத்து விட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுவதாக விவசாயம் செய்வதற்கு கஷ்டப்படுவதாகவும் தெரிவித்து என்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் உதவியாளர் இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
CATEGORIES தூத்துக்குடி
