கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை வசதி வறுகால் வசதி,மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சிந்தாமணி நகர் செண்பகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலை மிகவும் மோசமாக அடைந்து குண்டு குழியுமாக உள்ளதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள்,மற்றும் விவசாயிகள் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலும் அப்பகுதியில் கழிவுநீர் வாறுகால் மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் சரி செய்து தரக்கோரியும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேச சென்னேசேகவன் மற்றும் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
