BREAKING NEWS

கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

 

 

விழாவில் நகர மன்ற உறுப்பினர் கவியரசன் தலைமையில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் வைத்து மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

 

 

தொடர்ந்து மாணவ மாணவிகள் சிலம்பம், போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இசக்கிமீனா,நகர மன்ற உறுப்பினர் சண்முகராஜ் மேலாண்மைக் குழு உறுப்பினர் செல்வக்குமார், ஆசிரியர்கள் உமா ஸ்ரீதேவி ,

 

 

ஜெயசுதா, கல்வியாளர்கள் சுமதி, பிளசிங் காருண்யா, சத்துணவு அமைப்பாளர் லட்சுமி, உதவியாளர் லதா, சமையலர் பார்வதி,மற்றும் பெற்றோர்கள் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS