BREAKING NEWS

கோவில்பட்டி பகுதியில் பல்வேறு திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி பகுதியில் பல்வேறு  திருக்கோயிலில்  மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திராநகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வில்லிசேரி ஸ்ரீ மகான் ஸ்ரீ சாய்பாபா ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

ஜமீன் தேவர்குளத்தில் ஸ்ரீ ஜலசக்தி செல்வ விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வெயிலுகாந்தபுரம் இந்து கம்மவர் திவ்ய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கண்ணபிரான் திருக்கோவில் நான்காவது ஆண்டு வருஷாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது‌. இன்று அதிகாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ,கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார், மேலஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முருகன், ஷீரடி சாய்ராம் அறக்கட்டளை நிர்வாகிகள் இளங்கோவன், முருகன், ஆனந்த், உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )