BREAKING NEWS

கோவை

கோவை நாகப்பன் வீதி பகுதியில்
மழை நீரால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய முறையான வடிகால்கள் அமைக்க பணி மேற்கொள்ளப்படும் என்று
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கவுன்சிலர் வேட்பாளரான ரம்யா வேணுகோபால் உறுதி அளித்துள்ளார்.

 

மாநகராட்சி தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ள இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியின் 63 வது வார்டு பகுதியில் வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக மக்கள் நீதி மய்யம் கட்சி யின் கவுன்சிலர் வேட்பாளரான ரம்யா வேணுகோபால், வீடு தேடிச் சென்று மக்களிடம் அவர்கள் குறைகளை கேட்டறிவதுடன், அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்து வாக்குகளை சேகரித்து வருகிறார். இந்நிலையில் 63 வது வார்டு பகுதியை சார்ந்த நாகப்பன் வீதியில் பரப்புரை மேற்கொண்ட ரம்யா வேணுகோபால் துண்டு பிரசுரம் வழங்கி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாகப்பன் வீதியில் இருக்கக்கூடிய மழைநீர் தேங்குவது தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மழைநீர் செல்வதற்கு உரிய வடிகால்கள் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும் அப்பகுதியில் பராமரிக்கப்படாமல் இருக்கும் சமுதாயக் கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்க்கவும் தான் வெற்றி பெறும் பட்சத்தில் பணி மேற்கொள்வேன் என்றும் ரம்யா வேணுகோபால் தெரிவித்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )