BREAKING NEWS

சமத்துவ புரங்களில் உள்ள வீடுகளை தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படுவது குறித்து கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ் என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

சமத்துவ புரங்களில் உள்ள வீடுகளை தமிழக அரசின் சிறப்பு  திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படுவது குறித்து கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ் என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

தமிழகத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் உள்ள வீடுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் பல வீடுகள் பழுந்தடைந்துள்ளன. இந்த வீடுகளை சீரமைக்க வேண்டும் என அங்கு குடியிருப்போர் கோரிக்கை விடுத்து வந்தனர். அண்மையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் சமத்துவபுர வீடுகள் பழுது நீக்கப்படும் அதற்கு சிறப்பு நீதி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

 

 

ஒவ்வொரு சமத்துவபுரத்தில் உள்ள பயனாளிகளுக்கு அவர்கள் வீடுகளை பழுது நீக்க, ஒரு வீட்டுக்கு தலா 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட பயனாளிகளே அந்த நிதியை பெற்று தங்கள் வீடுகளை பழுது நீக்கவும் உத்தரிடப்பட்டுள்ளது.

 

இந்த அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் உள்ள 7 சமத்துவபுரங்களில் ஙீடுகள் பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளியணை மற்றும் மண்மங்கலத்தில் உள்ள சமத்துவபுரம் வீடுகள் பழுது நீக்கும் பணிகளை கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் கைத்தறித் துறை ஆணையருமான டி பி ராஜேஷ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

 

சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் பழுது நீக்கப்படுவது, சாலைகள் அமைக்கப்படுவது, சமுதாயக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் ஆகியவை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து அவர்கள் வெள்ளியணை ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு நடத்தினர். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )