BREAKING NEWS

சரிவில் தங்கம் விலை!

சரிவில் தங்கம் விலை!

சரிந்தது தங்கத்தின் விலை - எவ்வளவு குறைந்தது தெரியுமா? | Gold prices fall  Do you know how much less | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil  News | Tamil News Online | Tamilnadu News

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.

தொடர்ச்சியான விலையேற்றத்துக்குப் பிறகு இன்று தங்கம் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

gold rate today: Gold Rate: இன்று தங்கத்தின் விலை உயர்வா? சரிவா? - 22ct  24ct gold silver price in chennai today 24th july 2019 | Samayam Tamil

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 36 ரூபாய் குறைந்து, ரூ.4,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து, ரூ.37,824-க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,873-க்கு விற்பனையாகிறது.

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, ரூ.65,100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,656 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,656 ஆகவும், ஐதராபாத்தில் ரூ.4,656 ஆகவும், கேரளாவில் ரூ.4,652 ஆகவும், டெல்லியில் ரூ.4,656 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,656 ஆகவும், ஒசூரில் ரூ.4,774 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,774 ஆகவும் இருக்கிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )