சினிமா
அஜித்தின் நாங்க வேற மாரி சாதனையை முறியடித்த விஜய்யின் அரபிக் குத்து.
நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட்படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம்மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து பீஸ்ட் படத்தின் வேறு அப்டேட்டுகளுக்காக காத்திருந்தனர் ரசிகர்கள்.
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து வெளியாகும் என அறிவித்திருந்தனர் படக்குழுவினர். இதன் ப்ரோமோ கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகரும், அரபிக் குத்து பாடலாசிரியரான சிவகார்த்திகேயனும் அந்த ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுடன் ஃபோனில் பேசியிருந்தார் விஜய். இதைக்கேட்டு உற்சாகமானார்கள் ரசிகர்கள்.
இதையடுத்து ஹலமதி ஹபீபோ எனத்தொடங்கும் அரபிக் குத்து பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிளாக வெளியான இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் நாங்க வேற மாரி பாடலின் சாதனையை முறியடித்துள்ளது விஜய்யின் அரபிக் குத்து பாடல். அதாவது 30 நிமிடத்திற்குள் 5 லட்சம் லைக்ஸ் பெற்று அஜித்தின், ‘நாங்க வேற மாறி’ பாடலின் சாதனையை முறியடித்துள்ளது.
தற்போது வரை 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள அரபிக் குத்து பாடல், 2 மில்லியனுக்கு மேலான லைக்ஸ்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.