BREAKING NEWS

சினிமா

வலிமை ரிலீஸ் டைம் என்ன தெரியுமா?.

அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் ரிலீஸ் நேரம் குறித்து ரகசிய பிளான் வைத்துள்ளாராம், போனி கபூர்!

ஹச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்துள்ள வலிமை படம் 2019ம் ஆண்டு துவங்கப்பட்டது. கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போய், பல தடைகளை தாண்டி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த வாரம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பு, எதிர்பார்ப்பிற்கு பிறகு பிப்ரவரி 24ம் தேதி வலிமை உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

 

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில், உலகின் பல நாடுகளிலும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ள முதல் அஜித் படம் வலிமை தான். அதுவும் நீண்ட இடைவேளைக்கு பிறகு தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுடன் ரிலீசாக உள்ள பெரிய நடிகரின், பெரிய பட்ஜெட் படம் என்பதால் முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும் என்ற த்ரில்லிங்கான உணர்வு அனைவரிடமும் நிலவுகிறது. எந்த வித ப்ரொமோஷனும் இல்லாமல், ரசிகர்களின் கிரேசை மட்டும் வைத்து வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

லேட்டஸ்ட் தகவலின் படி, வலிமை படம் தமிழகத்தில் மட்டும் 700 முதல் 1000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் படி ரிலீஸ் செய்யப்பட உள்ள வலிமை படத்தின் ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியாகி விட்டது. ஆனால் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பல மடங்கு அதிகரித்திருப்பதால், படத்தின் ரிலீஸ் பற்றி மற்றொரு மாஸ்டர் பிளானை வகுத்துள்ளாராம் தயாரிப்பாளர் போனி கபூர்.

ஏற்கனவே திட்டமிட்டபடி ஃபஸ்ட் ஷோவை அதிகாலை 4 மணிக்கு திரையிட ஒரு பிளான் இருந்தாலும், ரசிகர்களின் ஆர்வத்தை பார்த்து நள்ளிரவு 1 மணிக்கு ஃபஸ்ட் ஷோவையும், 4 மணிக்கு இரண்டாவது ஷோவையும் திரையிடலாமா என போனி கபூர் ஆலோசித்து வருகிறாராம். காலை 4 மணி ஷோ உறுதியாகி விட்ட நிலையில், ஒரு மணி ஷோ பற்றி இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லையாம்.

இதுவரை கிடைத்த தகவலின் படி தமிழகத்தில் வலிமை ரிலீசாகும் அத்தனை தியேட்டர்களிலும் முதல் நாள் ஷோவிற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாம். அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் போர்டுடன் வலிமை ரிலீசாக உள்ளதாம். இந்த தகவல் அஜித் ரசிகர்களை அளவில்லாத உற்சாகத்தை தந்துள்ளதாம்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )