BREAKING NEWS

சினிமா

மலையாளத்தில் நவரச நாயகி கேபிஏசி லலிதா காலமானார்.

கேபிஏசி லலிதா மலையாள சினிமாவின் மகுடங்களில் ஒருவர். மலையாள சினிமா சரித்திரத்தில் அவரது இடம் முக்கியமானது. தவிர்க்க முடியாதது. அவரைத் தவிர்த்து மலையாள சினிமா சரித்திரத்தை ஒருவரால் எழுதிவிட முடியாது. அப்படியான கலையின் தலைமகளை மலையாள சினிமா இழந்திருக்கிறது.

கேபிஏசி லலிதா காயங்குளத்தில் 1948 பிப்ரவரி 25 ஆம் தேதி பிறந்தார். ஐந்து குழந்தைகளில் இவர் மூத்தவர். அவருடைய தந்தை ஒரு புகைப்படக் கலைஞர். அவரது குடும்பம் காயங்குளத்திலிருந்து கோட்டயத்தில் உள்ள சங்கனாச்சேரிக்கு இடப்பெயர்வு செய்தது. அங்கு அவர் நடனம் கற்றுக்கொண்டார். அவரது கலை உலக வாழ்க்கைக்கான முதல் திறப்பாக இது அமைந்தது. முதலில் செல்லப்பன் பிள்ளை மாஸ்டரிடம் அதன்பிறகு கலாமண்டலம் கங்காதரன் மாஸ்டரிடமும் அவர் நடனம் பயின்றார்.

10 வயது இருக்கும்போது அவர் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவரது முதல் நாடகம் கீதையுடெ பலி. நவீன மலையாள சினிமாவின் சிற்பிகளில் ஒருவரான இயக்குநர் கேஎஸ் சேதுமாதவன் படத்தில் இவர் முதலில் அறிமுகமானார். சேதுமாதவன் கடந்த டிசம்பர் மாதம் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. 1969 இல் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான கூட்டுக்குடும்பம் படத்தில் கேபிஏசி லலிதா அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. தமிழில் வெற்றி பெற்ற நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் மலையாள ரீமேக்கான ஹிருதயம் ஒரு ஷேத்திரம் படத்தில் பிரதான வேடத்தில் நடித்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )