BREAKING NEWS

சினிமா

விஜய் தேவரகொண்டாவை விமர்சித்த இளம் நடிகைக்கு எதிர்ப்பு.

தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டாவை விமர்சித்ததாக அவரது ரசிகர்கள் இளம் நடிகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் தேவரகொண்டா – அனன்யா பாண்டே
பிரபல இளம் நடிகை அனன்யா பாண்டே. இவர் பூரி ஜெகன்னாத் இயக்கும் தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய்தேவரகொண்டா, தமிழில் நோட்டா படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவை பயந்தாங்கொள்ளி நடிகர் என்று அனன்யா பாண்டே கருத்து தெரிவித்து உள்ளார். இது சர்ச்சையாகி உள்ளது.

இதுகுறித்து அனன்யா பாண்டே அளித்துள்ள பேட்டியில், “திரைப்படங்களில் விஜய் தேவரகொண்டா தைரியசாலியாகவும், முரடனாகவும் நடிக்கிறார். ஆனால், நிஜத்தில் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி யாரோடும் அவ்வளவாக பேச மாட்டார். அவர் வேலையை முடித்துக்கொண்டு அமைதியாக இருப்பார். நடிப்பில் அவரிடம் எனக்கு நிறைய ஒத்துழைப்பு கிடைத்தது. ஆனாலும் சினிமாவில் காட்டுவது போன்ற தைரியம் அவருக்கு நிஜ வாழ்க்கையில் இல்லை’’ என்றார்.

விஜய் தேவரகொண்டாவை பயந்தாங்கொள்ளி என்று கேலி செய்து அவமதித்து விட்டதாக விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் அனன்யா பாண்டேவை வலைத்தளத்தில் கடுமையாக கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )