BREAKING NEWS

சினிமா

பிரபல தமிழ் நடிகை ரூ.1 கோடி மதிப்புள்ள சொகுசுகாரை வாங்கியுள்ளார்.

ரூ.1 கோடி மதிப்புள்ள சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் நடித்த ‘காற்று வெளியிடை’ படத்தில் நாயகியாக நடித்தவர் அதிதி ராவ் ஹைதாரி. அடுத்து மணிரத்னம் இயக்கிய ’செக்கச் சிவந்த வானம்’, உதயநிதியின் ’சைக்கோ’, ’ஹேய் சினாமிகா’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர், ஆடி க்யூ7 ரக சொகுசு கார் ஒன்றைப் புதிதாக வாங்கியுள்ளார்.

அவர் ஷோருமில் காரை வாங்கும் புகைப்படமும் அதற்கு அவர் பொட்டு வைக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த காரின் மதிப்பு ரூ.95.6 லட்சம். வரியுடன் சேர்த்து ரூ.1.05 கோடி என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மும்பை ஆடி கார் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் ’வாழ்த்துகள் அதிதி ராவ். ‘ஆடி’ குடும்பத்துக்கு வரவேற்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )