மாவட்ட செய்திகள்
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடப்பதாக வந்த தகவலையடுத்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அதிகாரிகள் மிரட்டி செய்தி சேகரிக்க விடாமல் தடுத்த அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த மட்டபாறை, ராமராஜபுரம் பகுதிகளில் சுமார் 3-ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை முடிவுற்று தமிழக அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருக்கின்றனர்.

தற்போது கொள்முதல் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மூடைக்கு 30-முதல் 40-ரூபாய் வரை விவசாயிகளிடம் இலஞ்சமாக பெற்று வருவதாகவும் பணம் கொடுத்தால் மட்டுமே மூடைகள் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளர்களை மாவட்ட நெல்கொள்முதல் அலுவலர் கார்த்தியைச்சாமி செய்தியாளர்களின் உபகரணங்களை பறித்து அவர்களை தாக்கும் முயற்சியிலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்தியாளர்களை செய்தி எடுக்கக்கூடாது முதலில் இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என மிரட்டி ஒருமையில் பேசிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் செய்தியாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

மேலும் தமிழக அரசாங்கம் கடந்த மாதம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுக்கு பணம் வசூலிக்க கூடாது பணம் வசூலித்தால் கண்டிப்பாக அந்த அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில் இது போன்ற முறைகேடுகளை வெளிக்கொண்டுவர முயற்சிக்கும் செய்தியாளர்களை அதிகாரிகளே செய்தி சேகரிக்க விடாமல் தாக்கப்படுவது விவசாயிகளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழகரசு உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அதே சமயத்தில் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
