BREAKING NEWS

சினிமா

தயாரிப்பாளர் ஜீவி தற்கொலை குறித்து கே.டி.குஞ்சுமோன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வனின் மகன்கள் ஜீவி மற்றும் மணிரத்தினம். ஜீவி சுஜாதா பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் “மௌனராகம்” திரைப்படத்தை தயாரித்தார். இத்திரைப்படமானது நல்ல வெற்றியை தந்தது. பிறகு தம்பி மணிரத்தினம் இயக்கத்தில் “அக்னி நட்சத்திரம்” திரைப்படத்தை தயாரித்தார். இதுவும் வெற்றியடைந்தது. இந்நிலையில் கே.டி.குஞ்சுமோன் “கடலை போட பொண்ணு வேணும்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஜீவி குறித்து கூறியுள்ளார். கமல் இயக்கத்தில் வெளியாகிய நாயகன் திரைப்படத்தில் முதலில் நான் தயாரிக்க மாட்டேன் என்று கூறி வந்தேன். பிறகு ஜிபி கூறியதால் அவருக்காக படத்தை பண்ணினேன். இந்நிலையில் ஜீவி குறித்து எனக்கு தெரிந்த ஒரு உண்மையை உங்களிடம் கூற வேண்டும் என்று கூறினார்.

ஜீவி, திரைப்பட தயாரிப்பில் பல நஷ்டங்கள் ஏற்பட்டு கடன் வாங்கி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். அவர் என்னுடைய நெருங்கிய நண்பர் என்பதால் என்னிடம் பல பர்சனல் விஷயங்களையும் கூறுவார். என்னிடம் பலமுறை துப்பாக்கியை கொடு நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறுவார். ஆனால் நான் சமாதானப்படுத்திவிடுவேன். ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டார். அந்நிகழ்வில் இருந்து பல நாட்களுக்குப் பிறகு நான் மீண்டு வந்தேன். தயாரிப்பாளர் ஜீவி நஷ்டப்பட்டு இருந்தபோது மணிரத்னம் மற்றும் ரஜினி இருவரும் உதவவில்லை. இந்த சூழ்நிலை தான் இங்கு நிலவி வருகின்றது. தயாரிப்பாளர்கள் இல்லையென்றால் சினிமா இல்லை. இயக்குனர்கள், நடிகர்கள் இல்லை. தமிழ் மக்கள் தான் என்னை வாழ வைத்தனர் என கே.டி குஞ்சுமோன் பேசியுள்ளார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )