சினிமா
Vadivelu : அலப்பறை செய்த பீஸ்ட் நடிகர்! அப்செட் ஆகி ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ ஷுட்டிங்கை கேன்சல் பண்ணிய வடிவேலு
நகைச்சுவை நடிகர் வடிவேலு, தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் தயாராகி வருகிறது. சுராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் மற்றும் பீஸ்ட் பட பிரபலம் ரெடிங் கிங்ஸ்லி, நடிகர் ஆனந்தராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் ஆகியோர் இப்படத்தில் முக்கிக கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக தயாராக உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம், ஷிவானி நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு நேற்று திடீரென கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ரெடின் கிங்ஸ்லி என கூறப்படுகிறது. இப்படத்தின் முக்கிய காட்சி ஒன்று நேற்று படமாக்கப்பட இருந்ததாம். இதற்காக வடிவேலு மேக்கப் எல்லாம் போட்டு ரெடியாக இருந்த சமயத்தில், ரெடின் ஷூட்டிங்கிற்கு வராததால், அந்த காட்சி எடுக்க முடியாமல் போனதாம்.
அவருக்கு 2 மணிநேரம் காத்திருந்த வடிவேலு, பின்னர் கடும் அப்செட் ஆகி ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு சென்றுவிட்டாராம். ரெடின் கிங்ஸ்லியின் இந்த செயலால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படக்குழுவும் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்களாம். இதையடுத்து அந்த காட்சியை இன்று படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.