BREAKING NEWS

சினிமா

BB Ultimate : பிக்பாஸ் வீட்டுக்குள் பிரச்சனையா?… லைவ் ஸ்ட்ரீம் திடீரென நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் குழப்பம்

பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ள இந்நிகழ்ச்சி தற்போது புதிய புதுப்பொலிவுடன் ஓடிடி-க்காக நடத்தப்படுகிறது. தமிழில் முதன்முறையாக இவ்வாறு நடத்தப்படுவதால், இதனை பிரபலப்படுத்தும் விதமாக இதற்கு முன் நடந்து முடிந்த சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்கள் 14 பேரை தேர்ந்தெடுத்து களமிறக்கி உள்ளனர்.

அதன்படி முதல் சீசனில் இருந்து சினேகன், ஜூலி, சுஜா வருணியும், இரண்டாவது சீசனில் இருந்து ஷாரிக்கும், தாடி பாலாஜியும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதாவும், நான்காவது சீசனில் இருந்து அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியும், 5-வது சீசனில் இருந்து நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி ஆரம்பித்து 5 நாட்கள் ஆகிறது. ஒவ்வொரு நாளும் சண்டைக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது.

கடந்த 5 நாட்களாக எந்தவித தடங்கலும் இன்றி 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் லைவ் ஸ்ட்ரீமிங் இன்று திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக லைவ் ஸ்ட்ரீமிங் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

 

உண்மையில் இது ப்ரீ ரெக்காடர்ட்டு ஷோ தான் என்பதால், தொழில்நுட்ப கோளாறு எப்படி வரும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு வேளை பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையே ஏதேனும் பிரச்சனை வந்ததால் லைவ் ஸ்டிரீமிங்கை நிறுத்து வைத்துள்ளார்களா என ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர். விரைவில் இதுகுறித்து பிக்பாஸ் குழு விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )