BREAKING NEWS

சிவகங்கை ஒன்றிய அரசு இந்தி மொழியை திணிப்பதாக கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

சிவகங்கை ஒன்றிய அரசு இந்தி மொழியை திணிப்பதாக கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

 

செய்தியாளர் வி.ராஜா.

 

சிவகங்கை,  சிவகங்கையில் ஒரே மொழி ஒரே நுழைவுத் தேர்வு மத்திய அரசின் கொள்கையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்.

 

மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது தமிழகம், உள்ளிட்ட மாநிலங்கள் குற்றம்சாட்டியதோடு இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுக கட்சியினர் கண்டனம் தெரிவித்து சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசின் கட்டாய இந்தி திணிப்பை புகுத்தி இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம் எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம் எனவும் இந்தி மொழியை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணியும் – மாணவர் அணியும் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கையில் அரண்மனை வாசல் முன்பு நடைபெற்றது.

 

 

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் திராவிட இயக்க சுப.வீரபாண்டியன் அவர்கள், சிவகங்கை மாவட்ட கழக துணை செயலாளர் சேங்கைமாறன் அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், துரைராஜ், மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் அவர்கள்,

 

 

மானாமதுரை திமுக நகரச் செயலாளர் பொன்னுச்சாமி, திமுக நகர பொருளாலர் மயில்வாகணன், மானாமதுரை ஊராட்சி பெருந்தலைவர் லதா அண்ணாத்துரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகானி செந்தில்குமார் மற்றும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கதிர் ராஜ்குமார், மானாமதுரை நகராட்சி உறுப்பினர்கள், மாவட்ட கழக மூத்த நிர்வாகிகள், கழக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி, மானாமதுரை நகர இளைஞரணி, நகர மாணவரணி, மற்றும் நகர கழக தொழில்நுட்ப அணி,

 

உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், கழக முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் பல்வேறு அணி, அமைப்பாளர்களும் ஆகியோர் நடைபயணமாக துண்டு பிரச்சாரத்தை நடத்தி முடித்தனர். 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )