BREAKING NEWS

சிவகங்கை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய நகர்மன்ற தலைவர்.

சிவகங்கை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய நகர்மன்ற தலைவர்.

சிவகங்கை மாவட்ட தலைநகரான சிவகங்கையின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது.

மதுரை, தொண்டி தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு,சென்னை, கேரளா, உள்ளிட்ட பல பகுதிகளிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

 

சிவகங்கை நகரை சுற்றி பல சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் செயல்பட்டு வந்தது. இதனை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்ற நகர்மன்ற தலைவர்.

அரசு உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்த சிவகங்கை நகர் மன்ற தலைவரும் நகர்க்கழக திமுக செயலாளருமான CM.துரை ஆனந்த் மற்றும் நகர் மன்ற உறுப்பினரும் நகர் திமுக துணை செயலாளருமான வீணஸ் M.இராமநாதன் உள்ளிட்டோர் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் KN.நேரு மற்றும், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் KR பெரியகருப்பன் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.

 

இதற்கு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் கனிவோடு பரிசீலனை செய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் போர்க்கால அடிப்படையில் ருபாய் 1 கோடியே 94 லட்சத்தை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டார்.

 

இதனைப்பற்றி நகர் மன்ற உறுப்பினர் வீணஸ் ம. இராமநாதன் அவர்கள் கூறுகையில் பழைய பில்லர் மற்றும் கட்டிட சுவர்களை இடித்துவிட்டு புதுப்பொலிவுடன் சுமார் 18 வணிக கடைகள் மற்றும் பொது சுகாதார கழிப்பறையும் கட்டப்பட உள்ளது எனவும் கூறினார்.

அதில் கட்டப்படும் வணிக கடைகளின் மூலம் நகராட்சி நிர்வாகத்திற்கு கூடுதல் நிதி வருவாய் வருவதற்கு வழிவகை கூடும் எனவும் கூறினார்…

இதனை ஏற்படுத்தி தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களுக்கும் இதனை பரிந்துரைத்த சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம். துரை ஆனந்த் ஆகியோர்களுக்கும் எங்கள் சிவகங்கை நகர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் கூறினார்.

செய்தியாளர் வி ராஜா.

CATEGORIES
TAGS