சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாஜக தேசிய தலைவர் திரு எச். ராஜா அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாஜக தேசிய தலைவர் திரு எச். ராஜா அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து பெட்ரோல் டீசல் குறைப்பு மற்றம் மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு இந்த அரசு என கூறினார் எச்.ராஜா முதல்வர் சொல்லும்பொழுது நான் பதவிக்கு வந்து 100 நாட்களில் அனைத்து குறைகளையும் நிறைவேற்றுவேன் என சொல்லிவிட்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார் இந்த அரசு என்று ஆவேசமாக கூறினார் அப்படி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தால் உடனடியாக பதவி விலக வேண்டியது தானே என்று மேடையில் பேசிய எச். ராஜா அவர்கள் சொன்னார் வாக்குரிகளை நிறைவேற்ற வில்லை என கண்டித்து 1வருட ஆட்சியில் எந்த திட்டங்களும் மக்களுக்கு செயல்படுத்தவில்லை என பேசினர்.
இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, மாவட்ட. ஓபிசி. தலைவர் முருகானந்தம், மாவட்ட பொதுச்சொயலளார் மார்த்தாண்டன், மாவட்ட செயலாளர் சங்கர சுப்பிரமணியன் மானாமதுரை கிழக்கு ஒன்றியத் தலைவர் சுப. ரவிச்சந்திரன், மானாமதுரை நகர்மன்ற உறுப்பினர் நமகோடி, பாஜக கழக நிர்வாகிகள், மற்றம் இளைஞர் அணி, மகளிர் அணி, கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.