BREAKING NEWS

சி.எஸ்.கே. நட்சத்திர கிரிக்கெட் வீரருக்கு திருமணம்!! வைரலாகும் அழைப்பிதழ்!!

சி.எஸ்.கே. நட்சத்திர கிரிக்கெட் வீரருக்கு திருமணம்!! வைரலாகும் அழைப்பிதழ்!!

தீபக் சஹார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான தீபக் சாஹருக்கும், அவரது காதலி ஜெயா பரத்வாஜூக்கும் வருகிற ஜூன் மாதம் 1ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. அவர்களின் திருமண அழைப்பிதழ் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற வீரர் தீபக் சாஹர். ஐபிஎல் 15வது சீசனில் இவர் ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டு இவர் தோனி தலைமையிலான அணியில் தற்போது விளையாடி வருகிறார். தீபக் சாஹர் பாஸ்ட்  பவுலிங் ஆல் ரவுண்டராக திகழ்கிறார். இவரது பந்துவீசும் திறனில் 59 விக்கெட்டுகளை 63 போட்டிகளில் கலந்து கொண்டு கைப்பற்றியுள்ளார்.

சிஎஸ்கே அணிக்காக பவர்பிளேயில் பந்து வீசி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தும் அபார திறன் பெற்றவர். இதுவரை தீபக் சாஹர் 7 ஒருநாள் போட்டிகளிலும் 20 டி 20 ஆட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். ஆனால் துரதிருஷ்டவசமாக காயம் காரணமாக ஐபிஎல் 15 வது சீசன் முழுக்க இவரால் விளையாட முடியாமல் போனது. எனவே 2 மாதங்களுக்கு அவர் ஓய்வில் இருக்கிறார்.

இந்நிலையில் வருகிற ஜூன் 1ம் தேதி தீபக் சாஹர் தனது காதலி ஜெயா பரத்வாஜை திருமணம் செய்ய உள்ளார். இவர்கள் தங்கள் திருமண அழைப்பிதழில், தீபக் சாஹர்& ஜெயா காதல் நல்ல விதமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தங்களது உறவை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துகின்றனர். வரும் ஜூன் 1ம் தேதி அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்’’ என்று அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி ஐபிஎல் தொடரில், துபாயில் நடந்த போட்டியின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியின்போது சென்னை அணியின் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர், தனது தோழிக்கு மோதிரம் அணிவித்து, காதலை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )