சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆதீன மடாதிபதி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு செங்கோல் வழங்கிய திருவாவடுதுறை ஆதீனத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆதீன மடாதிபதி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்:-
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறையில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதீன சைவத்திருமடம் அமைந்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்றபோது அதன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் அப்போதைய பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் தற்போது புதிய நாடாளுமன்றம் கட்டிடம் திறப்பின் போது பிரதமர் மோடியிடம் ஆதீன 24 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் செங்கோல் வழங்கினார்.
சிறப்புமிக்க இந்த மடத்தில் 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது ஆதீன மடாதிபதி 78 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர் அவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பொற்காசுகள் வழங்கி ஆசி தெரிவித்தார்.