சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டத்தில் குடியாத்தம் பிரவீன் குமார் மனு!
வேலூர் மாவட்டம், குடியாத்தம், சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தி.பிரவீன்குமார்,
த/பெ. லேட்.ஆ. திருமணி,
எண்.286/135, பேர்ணாம்பட்டு ரோடு பகுதியில் வசிக்கிறார்.
இவர் மேற்படி முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தாத்தா தியாகி ஆதிமூலம் சுதந்திர போராட்ட தியாகி ஆவார். பிரவீன் குமார் அவருடைய மகன் வழிப்பேரன் ஆவார். எனது மாமனார் திரு.உதயகுமார் என்பவருக்கு சொந்தமான 1856 சதுர உள்ள வீட்டு மனை வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், வளத்தூர் கிராமத்தில் உள்ளது. மேற்படி சொத்தினை எனது மாமனார் உதயகுமார் கடந்த 21-09-2011ம் தேதியன்று திருமதி.கண்ணம்மாள் என்பவரிடமிருந்து கிரையப்பத்திர எண் 9277/2011ன் படி கிரையம் பெற்றுள்ளார். மேற்படி சொத்தின் சர்வே எண் 164/3B1 ஆகும். இதன் பட்டா எண்.511 ஆகும். நானும் எனது குடும்பத்தாரும் வேலை நிமித்தமாக பெங்களுரில் வசித்து வருகிறோம். மேற்படி சொத்தினை எனது மாமனார் தனது மகளும் எனது மனைவியுமான திருமதி.மேனகா மற்றும் எனது பெயருக்கும் மாற்றம் செய்வதற்காக ஆவணங்களை தயார் செய்வதற்காக வருவாய் ஆவணங்களை சரிபார்த்தபோது கர்நாடகா மாநிலம், கே.ஜி.எப்பை சேர்ந்த பச்சையப்ப முதலியார் என்பவரின் மகனான மணி என்பவர் வருவாய்த்துறை அதிகாரிகள் துணையோடு முறைகேடாக பட்டா ஆவணம், அடங்கல் ரிஜிஸ்டர் ஆகியவற்றில் முறைகேடாக திருத்தம் செய்து மேற்படி சொத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொண்டுள்ளார். மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் துணையோடு மேற்படி சொத்தில் மின் இணைப்பு, வீட்டு வரி, குழாய் வரி ஆகியவற்றையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.
மேற்படி முறைகேடு சம்மந்தமாக கடந்த 09-09-2023ம் தேதி முதல் 20க்கும் மேற்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட வருவாய் அலுவலம், முதலமைச்சரின்
தனிப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு போலீசார் ஆகிய பல இடங்களுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் இதுநாள்வரை மேற்படி மணி என்பவர் போலியான ஆவணம் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டது சம்மந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கபடவில்லை. நான் அனுப்பிய மனுக்களின் பேரில் என்னையோ அல்லது எனது மாமனாரையோ விசாரணைக்கு அழைக்கவில்லை.
நான் பணிந்து சமர்பித்துக்கொள்வது யாதெனில் ஒரு சுதந்திரப்போராட்ட தியாகியின் குடும்பத்தினைச்சேர்ந்த நபருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவென்று புரியவில்லை.
எனவே எனது மனுவின் பேரில் உரிய நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு இந்த மனுவை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாரிசு தாரர்களுக்கான குறைகேட்பு கூட்டத்தில் பிரவீன் குமார் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமியை நேரில் சந்தித்து அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.