செங்கம் அருகே கிராம சாலை துண்டிப்பால் பொதுமக்கள் சாலை மறியல்.

திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள கெங்கள மகாதேவி ஊராட்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவை வீட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள் வேலைக்கு செல்லவும் பள்ளி கல்லூரி மருத்துவமனை என அவர்களின் தேவைக்காக அங்குள்ள புதூர் பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது கெங்ள மகாதேவி பகுதியில் உள்ள மக்கள் சென்று வருவதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் என்பவரின் நிலத்தின் மேல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் மண் சாலை அமைத்து போக்குவரத்து வசதி செய்து தரப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் தன் விளைநிலத்தின் மீது சாலை அமைத்ததால் தனக்கு எவ்வித பயனும் இல்லை எனவும் அதனால் பொதுமக்கள் சென்று வரும் பாதையை தடுத்து யாரும் செல்லாத வகையில் 3 அடி ஆழம் நான்கடி அகலத்திற்கு சாலையை பள்ளம் தோன்றி பொதுமக்கள் பயன்பாட்டினை தடுத்து நிறுத்தியதால் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு ராதாகிருஷ்ணன் மீது அப்பகுதி மக்கள்.
கடலாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் பின்னர் கடலாடி காவல் துறையினர் சாலையை மூடி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வந்தனர் இதனை அடுத்து தொடர்ந்து சாலையை தோண்டி பொதுமக்கள் சென்று வர தடை விதித்து வரும் ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சாலையை தார் சாலையாக மாற்றி அமைத்து தரப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்
அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் போளூர் to சோழன் குப்பம் பகுதி செல்லும் கேட்ட வரம் பாளையம் என்ற கிராம சாலையில் அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த சாலை மறியலால் கிராம சாலை என்பதால் போக்குவரத்து பாதிப்பு இல்லை பின்னர் வந்த கடலாடி காவல்துறையினர் தங்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசப்பட்டு அதற்கு நல்ல தீர்வு காணும் வகையில் ஏற்பாடு செய்யப்படுவதாக உறுதி அளித்த பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.