செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மூன்று கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மூன்று கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நில உரிமையாளர்களுக்கு தெரியாமல் வேறு நபருக்கு போலி பட்டா மாறுதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வரும் மேல்கரியமங்கலம் மேல்புழுதியூர் மண்மலை ஆகிய மூன்று பகுதியில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கண்டன கோஷங்கள் எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது திடீரென செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தடுப்புகள் வைக்க முயற்சித்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் காவல் துணை கண்காணிப்பாளருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டாட்சியர் முனுசாமி சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ள மூன்று கிராம நிர்வாக அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்வதாக கூறிய பின்னர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
