BREAKING NEWS

செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

 

ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, மாவட்ட பொருளாளா் சண்முகையா, மாவட்ட இணைச்செயலாளா் சண்முகபிரியா, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளா் கண்ணன், மாவட்ட விவசாய பிரிவு அணி செயலாளா் பரமகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். 

 

மாவட்ட துணைச்செயலாளா் பொய்கை மாரியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். 

 

அதனை தொடா்ந்து தமிழக அரசின் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பபட்டது. 

 

நிகழச்சியில் ஒன்றியச்செயலாளா்கள் எஸ்.ஆர். இராமச்சந்திரன், வசந்தம் முத்துப்பாண்டியன், செல்லப்பன், ஜெயககுமார், நகரச்செயலாளா்கள் எம்.கே.முருகன், ஆறுமுகம், பரமேஸ்வரபாண்டியன்,

 

பேரூர் கழகச்செயலாளா்கள் டாக்டா் சுசிகரன், வடகரை அலியார், புதுார் பாலசுப்பிரமணியன், ஆய்க்குடி முத்துக்குட்டி, பண்பொழி கார்த்திக் ரவி, சாம்பவா் வடகரை நல்லமுத்து, ராயகிரி சேவுக பாண்டியன், செங்கோட்டை நகர்மன்ற தலைவா் இராமலெட்சுமி, துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன்,

 

அவைத்தலைவர் தங்கவேலு, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளா் ஞானராஜ், மாவட்ட எம்ஜிஆர்மன்ற துணை செயலாளா் ஜாகீர்உசேன், நகர எம்ஜிஆர்மன்ற நிர்வாகி சக்திவேல் மற்றும் நகர்மன்ற உறுப்பினா்கள் முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் மாவட்ட பிரதிநிதிகள்,

 

வார்டு பிரதிநிதிகள், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் செங்கோட்டை நகரச்செயலாளா் கணேசன் நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )