செசபிள் மாஸ்டர்ஸ் செஸ் இறுதிப்போட்டி

செசபிள் மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டியில் சீன வீரரிடம் போராடி தோல்வியடைந்தார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா. டை பிரேக்கரில் வெற்றியை நழுவ விட்ட பிரக்ஞானந்தா, உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2-வது இடம் பிடித்தார்.
உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும் ‘மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் தொடரின்’ செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ஆன்லைன் செஸ் போட்டி பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு முன்னேறினார். அதில் நெதர்லாந்தைச் சேர்ந்த அனீஷ் கிரி உடன் மோதினார். இருவரும் விடாப்பிடியாகப் போராடியதால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது.
CATEGORIES Uncategorized
TAGS தலைப்பு செய்திகள்
