செம்பனார்கோவிலில் இலவச பொது மருத்துவ முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் கலை மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.


முகாமில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் நிர்வாகி நெடுஞ்செழியன் கலந்துகொண்டு முகாமை துவங்கி வைத்தார். முகாமில் மருத்துவர்கள் கார்த்திக், அன்புமலர் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பொது நல மருத்துவம் சம்பந்தமான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.
மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை கலைமகள் கல்வி நிறுவனங்களில் இயக்குனர் என்.எஸ்.குடியரசு செய்திருந்தார்.
CATEGORIES மயிலாடுதுறை
