BREAKING NEWS

செய்யாறு கலைஞர் சிலை அருகே  8-ம் நாள் அன்னதானம்

செய்யாறு கலைஞர் சிலை அருகே   8-ம் நாள் அன்னதானம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் கலைஞர் சிலை அருகே 8ம் நாளான நேற்று வெம்பாக்கம் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொது மக்களுக்கு அன்னதான வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன், தி.மு.க., பொறுப்பாளர்கள் பொது மக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க., பொறுப்பாளர்களான வேல்முருகன், லோகநாதன், ஒன்றிய செயலாளர்கள் என்.சங்கர், ஜே.சி.கே.சீனுவாசன், சி.கே.ரவிக்குமார், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர்

எம்.கே.கார்த்திகேயன், நகர மன்ற துணைத் தலைவர் பேபிராணி,

வெம்பாக்கம் நிர்வாகிகளான சிட்டிபாபு, சீத்தாராமன், சிவப்பிரகாசம், பெருமாள், கல்பட்டு பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS